blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, April 19, 2014

பக்குவமற்ற கல்வி மான்களால் சமூகம் பின்னடையலாம் - றினோஸ் ஹனீபா

அண்மையில் 2014.04.12 ஆம் திகதி கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரயில் இடம்பெற்ற மாணவிகளுக்கான உயர்தர கல்விக்கான வழிகாட்டல் நிகழ்வில் வளவாளராக கலந்துகொண்ட உளவள ஆலோசகர் றினோஸ் ஹனீபா  மேலும் கருத்துரையில்
இன்று க.பொ.த சா.தரத்தில் நீங்கள் கற்று உயர்தர கல்விக்காக எந்த துறையினை தெரிவு செய்ய வேண்டும் என்று இருக்கின்ற இந்த காலப்பகுதியில் மிக நிதானாக உங்களது தெரிவினை நீங்களாகவே சுதந்திரமாக உங்களது ஆற்றல் அறிவுத்தரத்திற்கேற்ப தெரிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டதுடன்.

இன்று எமது சமூகத்தில் கற்ற பட்டம்பெற்றவர்கள் அதிகரித்திருக்கின்றார்கள் சந்தோசமானவிடயம் மறுபுறத்தில் கற்றவர்களில் சிலர் பக்குவபடாமல் சிறுபிள்ளைகள் போன்று செயற்படுவதையும் சமூகத்தில் காணக்கூடியதாகவுள்ளது.

அதுதான் மிக ஆபத்தானது ஏனெனில் இவர்கள் கற்றிருக்கின்றார்களே தவிர ஆளுமையை வளர்த்துக்கொள்ளவில்லை இதனால் ஆளுமையுள்ள கல்விமான்களை கண்டால் இவர்களால் தாங்க முடியாது அவர்களை மட்டம்தட்ட இரவுபகல் திட்டம் தீட்டுவார் இப்படிப்பட்ட கீழ்த்தரமான சில கல்விமான்களுகம் எமது பிரதேசத்தில் காணப்படுவது எமது சமூகத்தின் ஆரோக்கிய தன்மையினை பாதிக்கும்.

 மாணவர்களாகிய நீங்கள் கற்பது மாத்திரம் உங்களுக்கு முன்னேற்றத்தை கொண்டுவராது ஆளுமையினை வளர்த்துக்கொள்ள வேண்டும் அதுதான் உண்மையான முன்னேற்றம் எனக்குறிப்பிட்டார். 

இந்நிகழ்வில் கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் ஆசிரியர்களான ஏ. ஆதம்பாவா மற்றும் எம். தையிப்  பெற்றோர்கள், சமூக நலன்விரும்பிகள் மாணவிகள் என பலரும் கலந்தது கொண்டார்கள்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►