blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, April 21, 2014

டெங்குவால் மூன்று பாடசாலைகளுக்கு பூட்டு

டெங்குவால் மூன்று பாடசாலைகளுக்கு பூட்டு

டெங்கு பரவும் அபாய சூழல் காரணமாக சீதாவாக்கை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள் மூன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.



கங்வெல்ல ராஜசிங்க மத்திய வித்தியாலயம், பகன்கம ரொமானுவ கத்தோலிக்க வித்தியாலயம் மற்றும் கங்வெல்ல மாயாதுன்ன வித்தியாலயம் இவ்வாறு மூடப்பட்டுள்ளன.

டெங்கு ஒழிப்பு நடவடிக்கை காரணமாக இந்த பாடசாலைகள் எதிர்வரும் வியாழக்கிழமை வரை மூடப்பட்டுள்ளன.

டெங்கு நோய் காரணமாக கங்வெல்ல ராஜசிங்க மத்திய வித்தியாலய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி அப்பாடசாலை அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க பாடசாலை மூடப்பட்டு டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►