நாட்டில் கடந்த ஒரு வாரமாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில்
மதுபோதையில் வாகனம் செலுத்திய 1315 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில்
பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களின் 12 சாரதிகளும், 718 மோட்டார்
சைக்கிள் ஓட்டுனர்களும் முச்சக்கர வண்டி சாரதிகள் 462 பேரும் அடங்குவதாக
பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த
24 மணித்தியாலங்களில் 185 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை,
மதுபோதையில் வாகனம் செலுத்தியமைக்காக கைதான பஸ் சாரதிகளின் சாரதி அனுமதிப்
பத்திரத்தை முழுமையாக இரத்துச் செய்யுமாறு நீதிமன்றத்தினை கோரவுள்ளதாக
பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன
குறிப்பிட்டார்.
பஸ் சாரதிகள் மதுபோதையில் வாகனம் செலுத்துவதனால்
பஸ்சில் பயணிப்பவர்களுக்கும், வீதியில் பயணிப்பவர்களுக்கும் உயிர்
அச்சுறுத்தலை எதிர்நோக்குவதாக அவர் கூறினார்.
மதுபோதையில் வாகனம்
செலுத்திய சாரதிகளின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களின் சாரதி
அனுமதிப்பத்திரம் ஒருவருட காலம் வரை இரத்துச் செய்யப்படும் என பொலிஸ் ஊடகப்
பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறினார்.
No comments:
Post a Comment
Leave A Reply