கொழும்பு - கண்டி பிரதான வீதியில் வரகாபொல பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேன் ஒன்றும் பஸ் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
சம்மாந்துறை பகுதியில் இருந்து கொழும்பில் பாஸ்போர்ட் உட்பட சில அலுவல்களை செய்ய வந்த முஸ்லிம்களே இதில் வபாத்தாகி உள்ளதாக தெரிய வருகின்றது.
மூன்று பெண்கள் மற்றும் ஒரு சிறு குழந்தை ( இரண்டரை வயது, 29, 26 வயது பெண்கள் உட்பட சாரதி ஆகிய ஐவர் இந்த விபத்தில் பலியாகியுள்ளதாகவும் பலர் காயமடைந்து உள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்கள் வரகாபொல, கேகல்ல, கொழும்பு, நிட்டம்புவ வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தானது, வேகத்தினைக் கட்டுப்படுத்த முடியாமையினால் ஏற்பட்டதாக உதவி பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Wednesday, December 30, 2015
கொழும்பு - கண்டி பிரதான வீதியில் பாரிய விபத்து; ஐந்து பேர் பலி (படங்கள்)
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்த ஆசிரியருக்கு காதல் கடிதம் கொடுத் துள்ளார் உயர் தர வகுப்பில் கல்...
-
Diploma in Youth Development is a programme offe...
-
சமூக, கலாசார, பொருளாதார மற்றும் அரசியல்துறைகளில் நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் கௌரவத்துடன் சம சந்தர்ப்பத்துடன் வாழ்வது உறுதிசெய்யப்படும்
-
காணாமல் போன மலேசிய விமானத்தை கடலுக்கடியில் தேடும் பணிகள் அடுத்த வாரமளவில் நிறைவுக்கு கொண்டு வரவுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.




No comments:
Post a Comment
Leave A Reply