ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்ததன் பின்னர் நாட்டை விட்டு நான் ஒடவில்லை, மீண்டும் என்னுடைய சொந்த இடத்துக்கே வந்தேன்.
அதை விட்டு பிரான்ஸஸூக்கோ இங்கிலாந்துக்கோ செல்லவில்லை. என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை வலஸ்முல்ல பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கூறினார்.
மேலும் அவர் தெரிவித்தாவது, 'நான் எப்போதும் உங்களை மறந்ததில்லை. பசில் ராஜபக்ஷ ஒரு அரசியல்வாதி என்பதால் அவர் சிறைக்கு சென்றது பிரச்சினையில்லை, நிதிக் குற்றச்சாட்டின் பெயரிலேயே அவர் சிறைக்கு சென்றுள்ளார்.
ஆனால், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் தொடர்பில் இன்னமும் விசாரணை நடத்தவில்லை. ராஜபக்ஷக்களை அழிக்க வேண்டும் , வெட்டவேண்டும் ,குழிதோண்டி புதைக்க வேண்டும் என் மேடைகளில் ரணில் பேசுகின்றார் . நாங்கள் செய்த குற்றம் தான் என்ன? நாட்டை யுத்ததில் இருந்து மீட்டதா? அல்லது நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டு சென்றதா?' என்றார் .
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, July 26, 2015
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இலங்கை அணியை அரை இறுதியில் சந்திக்கும் வாய்ப்பை பெற்ற நடப்பு உலக சாம்பியன்கள் மேற்கிந்திய தீவுகளுக்கு வாழ்த்துக்கள். இன்று பாகிஸ்தானை ...
-
இலங்கை விவகாரங்களில் தலையிடும் உரிமை சர்வதேச சமூகத்திற்குக் கிடையாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
-
ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலால் நியமிக்கப்பட்ட போர்க்குற்ற விசாரணைக் குழுவுக்கு சாட்சியமளிப்பதற்கொனத் தயாரிக்கப்பட்ட படிவங்களை கிளிநொச்சிப்பக...

No comments:
Post a Comment
Leave A Reply