* சந்தனக் கட்டையை எலுமிச்சை சாறில் உறைத்து பூசி வந்தால், முகம் வசீகரத் தோற்றத்தைப் பெறும்.
* முருங்கைப் பிசினை பொடி செய்து அரை ஸ்பூன் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர உடல் வனப்பு பெறும்.
* வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து பின்னர் குளித்து வந்தால், உடல் சிவப்பாக மாறும்.
* அருகம்புல்லை நீர் விட்டு அரைத்து வடித்து பின் வெல்லம் சேர்த்து பருகிவர உடல் அழகும் முக அழகும் கூடும்.
* மரிக்கொழுந்து இலையையும் சில ஆவாரை இலைகளையும் சம அளவு எடுத்து அரைத்து தலையில் தடவி வந்தால்,செம்பட்டை முடி கருமையாக மாறும்.
* கணினி, வெல்டிங், வெயில் இவற்றில் வேலை செய்பவர்கள் பலருக்கு கண்கள் தக்காளிப் பழம் போல் சிவந்து காணப்பட்டால், வைத்தியம் வேறு ஒன்றுமில்லை. தக்காளிதான். தினம் இரண்டு தக்காளி வீதம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கண்களின் சிவப்பு பத்து நாட்களில் பறந்துபோய்விடும்.
* சிறிதளவு பப்பாளிப் பழத்தை நன்றாக மசித்து வெடிப்பு வந்த பகுதிகளில் தடவி விடுங்கள். இப்படித் தொடர்ந்து செய்து வந்தால், கால்களிலுள்ள வெடிப்பு மறைந்துவிடும்.
* வெள்ளை மிளகை ( நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். ) பசும்பாலில் அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும்.
* ஒரு நாளைக்கு 10 அல்லது 12 டம்ளர் தண்ணீர் குடித்து வந்தால், ( அதாவது நினைத்தபோதெல்லாம் தண்ணீர் குடிப்பதை பழக்கமாகக் கொண்டிருக்கவேண்டும். ) உதட்டில் வெடிப்பு வராது.
காலையில் எழுந்தவுடனும், மாலையிலும் கொஞ்சம் வெந்தயத்தை வாயில் போட்டு மென்று தின்று வந்தாலும் உதட்டில் வெடிப்பைப் பார்க்க முடியாது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்த ஆசிரியருக்கு காதல் கடிதம் கொடுத் துள்ளார் உயர் தர வகுப்பில் கல்...
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைக்கக் கூடாதென்றும், அதனை பா.ஜ.க. அனுமதிகக் கூடாதென்றும் கோரி, தமிழகத்திலுள்ள பா....
-
காபூல்: ஆப்கானிஸ்தானில் கடந்த 3 நாட்களாக பெய்த கடும் மழை வெள்ளத்தில் சிக்கி 100 பேர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து...
-
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்பேசும் மக்களாகிய தமிழர் மற்றும் முஸ்லிம்களின் ஆதரவு யாருக்கு என்பதை அறிந்து கொள்வதில் பலரும் ஆர்வமாக ...

No comments:
Post a Comment
Leave A Reply