இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் சகோதரர் இன்று காலை மரணமடைந்தார்.
அவர் மீது மேற்கொள்ளப்பட்ட கோடாரி தாக்குதலை தொடர்ந்து கொழும்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரியந்த சிறிசேன (40), இன்று காலை மரணமடைந்தார்.
பிரியந்த சிறிசேன, மூன்று பிள்ளைகளின் தந்தையுமாவார். அவர் தனது குடும்பத்தின் இளையவராகவும் மற்றும் ஆகிய நிறுவனங்களின் உரிமையாளராருமாவார்.
உடல் பொலன்னறுவை எதுமளிபிட்டியவில் உள்ள அவரது இல்லத்தில் தற்போது இருக்கின்றது, அவரது நல்லடக்கம் திங்கள் 3.00 மணியளவில் பொலன்னறுவை மயானத்தில் இடம்பெறும்.
அவரது பின் தலையில், மூளைக்குள் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், இயந்திர உதவியுடனேயே அவர் சுவாசித்துக் கொண்டிருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
நேற்று முன்தினம் இரவு 7.00 மணியளவில் பொலன்னறுவை பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் பிரியந்த சிறிசேன படுகாயமடைந்துள்ளார். காயமடைந்த பிரியந்த சிறிசேன பொலன்னறுவை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் முதலில் அனுமதிக்கப்பட்டு, பின்பு கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர் தற்பொழுது தனியார் வைத்தியசாலையில் வைத்தே மரணமடைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, March 28, 2015
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
239 பேருடன் பீஜிங் சென்றபோது நடுவானில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் முயற்சி உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. ஒரு சில நாளில் முடிவு தெரிந்த...
-
கடலுக்கு மத்தியில் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் வண்ணம் அழகாய் ஜொலித்துக் கொண்டிருக்கிறது “மிக்கோநொஸ் தீவுகள்”.
-
சிறுநீரக சிகிச்சை நிலையமொன்றை அமைத்துக் கொடுக்க சீனா இணக்கம் வெளியிட்டுள்ளது.
-
'ரிசாத் பதியூதீனும் ரவூப் ஹக்கீமும் நம்பிக்கைத் துரோகிகள் காட்டிக் கொடுத்துவிட்டார்கள்'.

No comments:
Post a Comment
Leave A Reply