அவுஸ்திரேலியா தலைநகர் சிட்னியின் லின்ட் ஃகேப் (Lint Cafe) ஹொட்டலில் நேற்று காலை துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்த தீவிரவாதி ஹாரூன் மோனிஸ் (Harron Monis) , 17 பொதுமக்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டான்.அவனிடம் இருந்து 5 பேர் பாதுகாப்பாக தப்பி வெளியே ஒடி வந்தனர். எஞ்சியவர்களை மீட்பதற்காக பொலிசார் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் தீவிரவாதி ஹாரன் மோனிஸ் மற்றும் இரு பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பலியான நபர்களில் ஒருவர் அந்நாட்டின் பிரபல வழக்கறிஞர் கத்ரீனா டவ்சன் (katrina dawson Age-38) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதியின் பிடியில் சிக்கிய தனது கர்ப்பிணி தோழி ஜூலி டெய்லரை (Julie Tailor) காப்பாற்றும் முயற்சியில் கத்ரீனா படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கத்ரீனாவின் மரணம் அவரது சக வழக்கறிஞர்களை அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply