இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜெயவர்த்தனே ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார்.கடந்த ஆகஸ்டு மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து மஹேல ஓய்வு பெற்றிருந்தார்.
இந்த நிலையில் அவர் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக்கிண்ண போட்டி முடிந்ததும் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளார்.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஏழாவதும் இறுதியுமான ஒருநாள் இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டிருந்த மஹேல ஜெயவர்த்தனே, ”இது தான் உள்ளூரில் தான் விளையாடும் கடைசி ஒருநாள் போட்டியாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply