எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. இதில் ஆளும் கட்சியின் சார்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுகிறார்.
இந்நிலையில் முக்கிய அமைச்சர்களும், எம்.பிக்களும் பொது வேட்பாளரான மைத்திரிபாலவுக்கு ஆதரவு வழங்க ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் யாருக்கு ஆதரவு வழங்குவது என்ற முடிவை இன்னமும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
ஆனால் அக்கட்சியின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம், பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹசனலி ஆகியோர் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் நேற்று சந்தித்துப் பேசினர்.
இதன்போது சில கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே ஜனாதிபதிக்கு தேர்தலில் ஆதரவு வழங்குவோம் என அறிவித்தனர். இதற்காக எழு நாட்கள் அவகாசமும் வழங்கினர்.
No comments:
Post a Comment
Leave A Reply