ஐக்கிய நாடுகள் மனித உரிமை குழுவுக்கு சமர்ப்பித்த ஆவணத்திலேயே இதனை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்த மூவருக்கும் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்றின் பதிவாளர் இது குறித்து மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ள போதிலும் அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
2006 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை இடம்பெற்ற வேளை வெளிவிவகார அமைச்சினூடாக சாட்சிகளை கண்டுபிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் அரசாங்கம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply