எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, October 10, 2014
மீன்பிடி சட்டதிட்டங்கள் தொடர்பில் மீனவர்களுக்கு தெளிவூட்டல்
சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும்போது கடைப்பிடிக்க வேண்டிய சட்டதிட்டங்கள் குறித்து மீனவர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளதாக கடற்றொழில் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன தெரிவிக்கின்றார்.
இலங்கை மீனவர்கள் கடைப்பிடிக்க வேண்டி சட்டதிட்டங்கள் அடங்கிய ஆலோசனை கையேடு ஐரோப்பிய ஒன்றியத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.
அதன் பிரகாரம் சட்டதிட்டங்கள் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னதாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும், அவ்வாறில்லாத பட்சத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் கூறினார்.
இதற்கமைய நாட்டிலுள்ள சகல மீனவர் சங்கங்களுக்கும் இதுகுறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
காலி, உனவட்டுன பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு வெளிநாட்டு பிரஜைகள் உயிரிழந்துள்ளனர்.
-
புனித கஃபத்துல்லாஹ்வின் திறவுகோலை பரம்பரை பரம்பரையாக வைத்து பாதுகாக்கும் பணிக்குரிய நபரான ஷெய்ஹ் அப்துல் காதிர் அல் ஷெய்பி என்பவர் நேற்று...
-
<--அபூர்வப் பாண்டாக் குட்டிகள் சீனாவிலுள்ள ஒரு மிருகக்காட்சி சாலைய...
-
ஜப்பானில் உள்ள நிறுவனம் ஒன்று செயற்கை மனைவியை உருவாக்கியுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply