ஊவா மாகாண சபைத்தேர்தலுக்கான வாக்களிப்புகள் இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை இடம் பெறவுள்ளன.
இதன்போது 234 வாக்குச்சாவடிகளில் வாக்களிப்புகள் இடம்பெறவுள்ளன.
வாக்களிப்பிற்காக 9 லட்சத்து 42 ஆயிரத்து 730 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
பதுளை
மாவட்டத்தில் 18 உறுப்பினர்களையும் மொனராகலை மாவட்டத்தில் 14
உறுப்பினர்களையும் தெரிவு செய்வதற்கான இந்த தேர்தலில் 617 வேட்பாளர்கள்
களம் இறங்கியுள்ளனர்.
இதனிடையே, மொனராகலை மாவட்ட வாக்களிப்பும் தயார் நிலையில் உள்ளதாக அரசாங்க அதிபர் பத்திநாதன் தெரிவித்துள்ளார்
இதனிடையே,
வாக்காளர்கள் காலை வேளையிலேயே வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று
வாக்குகளை அளிக்குமாறு தேர்தல்கள் செயலகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதன்மூலம் வீண் சிரமங்களை தவிர்த்துக் கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே,
தேர்தல் வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு
வழங்கப்படவுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வாக்களிப்புக்கள் மாலை 4 மணி வரையில் இடம்பெறவுள்ளது.
இதனை
தொடர்ந்து வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாக உள்ள நிலையில், முதலாவது தேர்தல்
பெறுபேறுகள் இன்றிரவு இரவு 10 மணி தொடக்கம் 11 மணிக்கிடையில் வெளியாகும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, September 20, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கென வவுனியா தெற்கு வலயக் கல்வித் திணைக்களால் அங்கு பணியாற்றும்...
-
அமெரிக்காவில் ஆபாச படம் பார்த்த 15 வயது மகனை அவனது தாய் பொலிசில் பிடித்து கொடுக்க முயன்றுள்ளார்.
-
பிரதமர் மோடி நேற்று சியாச்சின் பனி மலைக்கு சென்றார். நாட்டின் உயரமான மலை பகுதி இது.
-
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் உறுப்பு நாடாக இந்தியா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
Leave A Reply