தேர்தல் சட்ட மீறல்கள் குறித்து 63 சம்பவங்கள் பொலிஸாருக்குப் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
இவற்றுள் 46 சம்பவங்கள் மொனராகலை மாவட்டத்திலும், ஏனையவை பதுளை மாவட்டத்திலும் பதிவாகியுயள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
தேர்தல் சட்ட மீறல்கள் குறித்து கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு வேட்பாளர்களும் அடங்கியுள்ளனர்.
இதேவேளை, ஊவா மாகாணத்தின் பாதுகாப்பிற்காக நான்காயிரத்து 500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஏற்கனவே கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply