இதன்படி சாதாரண தபாலுக்கான முத்திரைக் கட்டணம் 05 ரூபாவிலிருந்து 10 ரூபாவாகவும் தபாலட்டையின் விலை 8 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனினும் பதிவுத் தபால் கட்டணங்களில் எதுவித மாற்றமும் செய்யப்படவில்லையென அவர் கூறினார்.
மேலும் 20 கிராம் நிறைவு கொண்ட வியாபாரக் கடிதமொன்றின் கட்டணம் 15 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேற்பட்ட ஒவ்வொரு கிராமுக்கும் 10 ரூபா வீதம் அறவிடப்படுமெனவும் அவர் கூறினார்.
பொதிகளுக்கான தபால் கட்டணம் 250 கிராமிற்கு 90 ரூபாவும் 500 கிராமிற்கு 150 ரூபாவும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply