கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் உடற்கூற்று சிகிச்சை நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபசார விடுதி ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது.
இந்த சுற்றிவளைப்பின் போது 10 சந்தேகநபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் சேசாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநர்கள் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
விபசார விடுதியின் முகாமையாளர், உதவியாளர் மற்றும் 09 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுவுள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply