வவுனியா, ஓமந்தை, கொந்தக்காரன் குளம் பகுதியில் மீள்குடியேறிய மக்களுக்கு சேவாலங்கா நிறுவனத்தால் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டிருந்தது.
திங்கட் கிழமை மாலை குறித்த பகுதியில் மழை பெய்திருந்த நிலையில் வீட்டின் உற்பகுதியை நோக்கி மோட்டர் சைக்கிளை வீட்டு வாசல் ஊடக ஏற்றிய போது, மோட்டர் சைக்கிள் கதவு நிலையுடன் மோதியதையடுத்து நிலையுடன் இணைந்திருந்த சுவர் இடிந்து விழுந்துள்ளது.
இதனால் மோட்டர் சைக்கிளுக்கு அருகில் நின்ற சிறுவன் சுவருக்குள் அகப்பட்டு காயமடைந்துள்ளார்.
உடனடியாக சிறுவனை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் முயற்சி வெற்றியளிக்காது சிறுவன் மரணமடைந்துள்ளார். இச் சம்பவத்தில் கொந்தக்காரன் குளத்தைச் சேர்ந்த எஸ். தாரகன் (வயது 4) என்ற சிறுவனே மரணமடைந்தவராவார்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment
Leave A Reply