அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பணியக பிரதம இன்ஸ்பெக்டர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சந்தேகநபர்களை நேற்று கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து துப்பாக்கி ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.
இரண்டு தரப்பினருக்கு இடையில் நிலவிவந்த தனிப்பட்ட தகராறு காரணமாகவே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
துப்பாக்கி சூட்டுக் காயங்களுடன் அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை அம்பாறை குற்றப்புலனாய்வுப் பணியக பொலிஸார் மேற்கொண்டிருந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சகோதர்களான இரண்டு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்களை அம்பாறை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply