தமிழ்நாட்டின் கரையோர நகரான ஒரியூரில் இருந்து சட்டவிரோதமாக படகொன்றின் மூலம் அவுஸ்திரேலியா செல்லமுயன்ற 9 இலங்கை அகதிகளை, இந்திய பொலிஸார் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.தமிழ்நாட்டின் வெவ்வேறு அகதிகள் முகாம்களில் இருந்து வந்திருந்த ஒன்பது பேரும் ஒரியூரில் புனித அருளானந்தர் கிருஸ்தவ தேவாயலயத்திற்கருகில் உள்ள அறைகளில் கடந்த இரண்டு நாட்களாக தங்கியிருந்துள்ளனர். பொலிஸார் தங்களை கண்காணிப்பது இவர்களுக்கு தெரியவந்தவுடன் வேறு இடமொன்றிற்கு செல்ல முயன்றுள்ளனர்.
இருந்தும் இவர்களில் அறுவர் தேவாலய வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டதுடன், கார் ஒன்றில் தப்பச்செல்ல முயற்சித்த மூவரையும் இடைமறித்து கைது செய்துள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
Leave A Reply