பிரபல பொப் இசைப் பாடகி ஷகிரா, பேஸ்புக்கில் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். ஷகிராவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தை 100 மில்லியன் பேர் ‘லைக்’ செய்துள்ளமையே இந்த சாதனை.
பிரபலம் ஒருவரின் பேஸ்புக் பக்கம் இவ்வளவு ‘லைக்’ பெறுவது இதுவே முதன்முறை.
ஷகிராவின் பேஸ்புக் பக்கத்தை இதுவரை (இந்த செய்தி பதிவேற்றப்படும் நேரம்) 100,838,592 பேர் லைக் செய்துள்ளனர்.
இது குறித்து குறிப்பிட்டுள்ள ஷகிரா, “இந்த மைல்கல்லை எட்டியதை நான் பெரிய கௌரவமாக கருதுகிறேன், சமூக ஊடகங்கள், குறிப்பாக, பேஸ்புக், என்னைப் போன்ற பல கலைஞர்களுக்கும் ரசிகர்களுக்கும் நடுவே இருந்த இடைவெளியைக் நிரப்பியுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பேஸ்புக்கில் தனது மறக்க முடியாத தருணங்களைப் பற்றிய காணொளி ஒன்றையும், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஷகிரா பதிவேற்றியுள்ளார்.
பேஸ்புக் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மார்க் ஸக்கர்பேக் ஷகிராவிற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
கொலம்பியாவைச் சேர்ந்த பாடகியான ஷகிரா, பல பொப் பாடல்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர்.
2010ஆம் ஆண்டு உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளுக்கான உத்தியோகபூர்வ பாடல் ஷகிராவால் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply