கல்பான, வெல்பொல, புன்சிறிபுர பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதான ஆனந்த பிரேமலால் திசாநாயக்க எனும் விவசாயியே நேற்றிரவு இவ்வாறு கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
சந்தேகநபரான 28 வயதுடைய துசித அல்விஸ் அப் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் ஒளிந்திருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் விவசாயியின் மனைவியிடம் கடந்த ஏப்ரல் மாதம் ஆயிரம் ரூபாவை கடனாக வாங்கியிருக்கிறார்.
அதைத் திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்ததால் விவசாயி அவரைப் பல தடவைகள் ஏசியிருக்கிறார்.
இந்நிலையில் நேற்றிரவு மதுபோதையுடன் விவசாயியின் வீட்டுக்கு வந்த சந்தேகநபர் விவசாயியுடனும் அவரது மனைவியுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் அவர் விவசாயியைத் தாக்கியபின் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்பான வைத்தியசாலையில் இன்று காலை வைக்கப்பட்டிருந்தது.
களுத்துறை பிரதம நீதிவான் அஜித் மாசிங்க, நீதிவான் மரண விசாரணையை நடத்தியபின் பிரேத பரிசோதனையை நடத்துவதற்கு சடலத்தை நாகொட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.
களுத்துறை வடக்கு பொலிஸ் பொறுப்பதிகாரி பிரஷாத் சில்வாவின் தலைமையில் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக புலன் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
No comments:
Post a Comment
Leave A Reply