அமெரிக்கா மட்டும் எதிராக வாக்களித்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அப்பாவிப் பொதுமக்கள் உள்ளிட்ட 680 பலஸ்தீனியர்கள் மற்றும் 31 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்தினர் சமாதான உடன்படிக்கை மேற்கொள்ள எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், சர்வதேச விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் நேற்றுமுன்தினம் தீர்மானம் கொண்டு வந்தது.
47 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இந்த தீர்மானத்துக்கு 29 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா மட்டும் எதிராக வாக்களித்துள்ளது.
இந்த வாக்கெடுப்பில் 17 நாடுகள் கலந்து கொள்ளவில்லை. தீர்மானம் நிறைவேறியதன் மூலம் காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல் குறித்து விசாரணை விரைவில் நடைபெறும் என்று ஐ.நா. அறிவித்திருக்கிறது.
No comments:
Post a Comment
Leave A Reply