புதிதாக உருவாகி உள்ள தெலங்கானா மாநிலத்தின் புதிய திட்டங்கள் குறித்து இந்திய அளவிலும் உலக அளவிலும், சானியா விளம்பரப்படுத்துவார் என அம்மாநில தொழிற்துறை உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கழக இயக்குநர் ஜெயேஷ் ராஜன் தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவின் தூதராக நியமிக்கப்பட்ட நியமன கடிதத்துடன் ரூ.1 கோடி மதிப்பிலான காசோலையை சானியா மிர்சாவுக்கு, தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் வழங்கியுள்ளார்.
தெலங்கானா விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ள வீராங்கனை சானியா மிர்சா, ஐதராபாத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply