எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, July 17, 2014
ஜனாதிபதியின் காரை வாங்கிய ஜெயலலிதா குறிப்பிட்ட காலத்தில் வரியை செலுத்தாதது ஏன்? நீதிபதி கேள்வி!
ஜனாதிபதியின் காரை வாங்கிய ஜெயலலிதா குறிப்பிட்ட காலத்தில் அதற்கான வரியை செலுத்தாதது ஏன் என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டிகுன்ஹா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் புதன்கிழமை 20வது நாளாக வாதங்களை முன்வைத்தார். 1992ம் ஆண்டில் குடியரசு தலைவரிடம் இருந்து வாங்கப்பட்ட காருக்கு 1993-94ம் ஆண்டில் வருமான வரி செலுத்தப்பட்டதாக ஜெயலலதா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
அப்போது குறிக்கிட்ட நீதிபதி மைக்கேல் டிகுன்ஹா, 1992ம் ஆண்டு செப்டம்பரில் வாங்கிய காருக்கு 1992-93ம் ஆண்டு வருமான வரி செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், காலதாமதமாக செலுத்தப்பட்டது ஏன்.!!~
ஜெயலலிதா வங்கிக் கணக்கில் அவ்வப்போது 50 லட்சம் ரூபாய், ஒரு கோடி ரூபாய் என்று டெபாசிட் செய்துள்ளாரே. இந்த பணம் எப்படி வந்தது என்று கேள்வி எழுப்பினார்.
ஜெயலலிதா தரப்பு வாதம் இன்றும் (வியாழன்) தொடர்ந்து நடைபெறுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
விமானங்களை கடத்தும் தலிபான் தீவிரவாதிகள் மிரட்டுவது போல உள்நாட்டு மக்களை சிறைபிடித்து இலங்கை, இந்தியாவை மிரட்டுகிறது.
-
செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் உயர் சபை ஒன்று கூடல் 19.07.2014 ஆம் திகதி நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவரும் உளவள ஆலோசகருமான றினோஸ் ஹனீபா தல...
-
குளியாபிட்டிய சிறுவனுக்கு பாடசாலை அனுமதி தொடர்பான ஒப்பந்தத்தில் கண்டி டிரினிடி கல்லூரி அதிபர் மற்றும் கல்வி அமைச்சு அதிகாரிகள் இன்று காலை கை...
-
லாகூர்: பாகிஸ்தானில் ஒன்பது மாத குழந்தை மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பாகிஸ்தானில் உ...
No comments:
Post a Comment
Leave A Reply