blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, July 31, 2014

முஸ்லிம்களுக்கு எதிரான அநீயாயத்தில் நாம் என்ன பாடங்களை கற்று வருகின்றோம் றினோஸ் ஹனீபா

அன்பின் சகோதர்களே! உலகில் நடைபெரும் முஸ்லிம்களுக்கு எதிரான அநீயாயத்தில் நாம் என்ன பாடங்களை கற்று வருகின்றோம். எனக்கும் முஸ்லிம் உம்மாவுக்கும் இடையிலான தொடர்பு என்ன? நான் வாழும் நாட்டிற்கும் பிறந்த
மண்ணுக்கும் என்ன பங்களிப்பை
நான் செய்துவருகின்றேன் என்று ஒரு முறை எம்மை நாம் சுய விசாரனை செய்ய வேண்டிய காலம் என தனது அறிக்கையில் குறிப்பிட்டார்,

 முஸ்லிம்கள் உலகில் அரபு வசந்தத்தினை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார்கள் இது எமக்கு எதிர்காலத்தில் பெரும் சவாலாக அமையும் என்பதால் அமெரிக்கா இன்று வகுத்துள்ள புதிய திட்டம் அப்துல்லாஹ்வை கொலை செய்ய மைக்கல் பீரிசை அனுப்புவதற்கு பதிலாக இன்னுமொரு அப்துல்லாஹ்வை அனுப்பி கொலை செய்கின்ற நவீன யுக்தியினை சிறப்பாக பயன்படுத்துகிறார்கள். இந்த இடத்தில் தான் நாம் சிந்திக்க வேண்டும் ஒரு சமூக எழுச்சியில் ஒரு ஊரின் முன்னேற்றத்தில் நான் இன்னொரு அப்துல்லாஹ்வுக்கு தடையாக இருக்கின்றேனா? எனது சமூகத்திற்கான பங்களிப்பு எந்த மட்டத்தில் இருக்கின்றது. சமூகத்தினை பற்றி மணித்தியால கணக்கில் பேசுகிறேன் பிரச்சினைகள் வரும் போது உணர்ச்சி வசப்படுகிறேன் ஆனால் தொடர்ச்சியாக சமூக களப்பயணத்தில் ஈடுபட உலக ஆசை எமக்கு தடையாக இருக்கின்றது.

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் 'யார் சமூகத்தின் மீது அக்கரை கொள்ளவில்லையோ அவன் நயவஞ்சகன்' என்றார்கள். அக்கரை என்றால் என்ன ஒன்று தான் சமூகத்திற்காக உழைப்பது அல்லது உழைக்கின்றவர்களுக்கு உறுதுனையாக இருப்பது. சமூகப்பணி செய்யும் போது வஞ்சகர்களால் வசபாடத்தான் முடியும் ஆனால் பயணத்தினை தடுக்க முடியாது. நபி (ஸல்) அவர்கள்  சொன்னார்கள் ஒரு முஸ்லிம் கோலையாக இருக்கமாட்டான்.  பிரச்சினைகள் வருகின்ற போது பக்குவமற்றவர்களிடமிருந்து நாம் பக்குவமாக நடந்துகொள்ளும் போது ஈற்றில் அவர்கள் திருந்துவதற்கு வாய்ப்பாக அமையும்.

 எனவே, உலகில் நடைபெரும் பிரச்சினையும் எமக்குள் இருக்கின்ற சிறுபிள்ளைத்தனங்களுக்கும் அடிப்படைக்காரணம் போட்டியல்ல பொறமையும், காழ்ப்புணர்வும்தான்.இந்த கொடிய வஞ்சகர்களை எப்போது கண்டுபிடித்து அவர்களை இருக்க வேண்டிய இடத்தில் வைக்கின்றோமோ! அப்போதுதான் எம்மால் வெற்றியின் இலக்கை அடைய முடியும்.

வஞ்சகர்களின் முதற்பண்பு பேசியதற்கு எதிராக செயற்படுவார்கள், பேசியது போல செயற்பட மாட்டார்கள், நான் இல்லாவிட்டால் சமூகத்திற்கு ஒன்றுமே நடக்ககூடாது என்று அழிக்க முயற்சிசெய்வார்கள். இரண்டு பேருக்குக்கூட தலைவராக இருக்க தகுதியற்றவராக இருப்பார் ஆனால் பேச்சிலும் நடையிலும் தகுதியானவர்கள் போல சமூகத்தினை ஏமாற்றுவார். தன்னால் தனித்து நின்று சாதிக்க முடியாதவராக இருப்பார் ஆனால் காக்கையின் கூட்டில் கூயில் முட்டை இடுவது போல சமூக அந்தஸ்தை எதிர்பார்ப்பார்கள். கிடைக்காவிட்டால் வசைபாடுவார்கள்.

யாஅல்லாஹ் இப்படிப்பட்ட வஞ்சகர்களிடமிருந்து எமது சமூகத்தினை பாதுகாப்பாயாக? நபி (ஸல்) அவர்களுக்கு முனாபிக்குகளை, நயவஞ்சகர்களை இணங்காட்டி கொடுத்தது போல இவர்களை சமூதாயத்திற்கு இணங்காட்டி கொடுப்பாயாக? இல்லாவிட்டால் எமக்குள் இருக்கும் சிறந்த தலைவர்களை, அறிஞ்சர்களை, நல்லவர்களை அழித்துவிடுவார்கள் யா அல்லாஹ் உலகில் முஸ்லிம்கள் எங்கெல்லாம் கஷ்டப்படுகின்றார்களோ அதங்கு பின்னால் இருப்பது கலிமா சொன்ன நயவஞ்சகர்கள் நீ அவர்களை எப்போது அழிக்கின்றாயோ அப்போதுதான் முஸ்லிம் சமூகம் வெற்றியின் இலக்கை அடையும் ரஹ்மானே!

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►