blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, July 18, 2014

295 பயணிகளுடன் மலேசிய விமானம் வீழ்ந்து நொறுங்கியது! சுட்டுவீழ்த்தப்பட்டதா என சந்தேகம்..!

295 பயணிகளுடன் மலேசிய விமானம் வீழ்ந்து நொறுங்கியது! சுட்டுவீழ்த்தப்பட்டதா என சந்தேகம்?மலேஷிய விமானம் உக்ரெய்னில் விழுந்து நொறுங்கியதாக ஆரம்ப கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த விமானத்தில் 295 பயணிகள் இருந்தனர்.
இந்த விமானம் ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூருக்கு வந்துகொண்டிருந்த வழியில் இந்த விபத்து நடந்திருக்கிறது.

இந்த விமானத்தில் பயணித்த 295 பயணிகளும் உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது. தனது விமானம் (எண் எம்.எச்.17) உடனான தனது தகவல்தொடர்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டுவிட்டதாக மலேஷியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

கடைசியாக அந்த விமானத்துடனான தொடர்பு என்பது உக்ரெய்ன் வான்பரப்பில் பறந்தபோது கொண்டிருந்தபோது தான் இருந்தது என்றும் அந்த விமான சேவை நிறுவனம் தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறது.

உக்ரெய்னுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான எல்லைப்பகுதியில் கிழக்கு ஊக்ரெய்னில் இந்த விமானம் தரையில் எரிந்ததை கண்டதாக மொஸ்கோவில் இருக்கும் வான்வழி கண்காணிப்பு அதிகாரிகள் தெரிவித்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

அந்த குறிப்பிட்ட விமானம் ரஷ்ய வான்பரப்பிற்குள் நுழையவில்லை என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார் எனவும் கூறப்படுகிறது.

இந்த விமானம் சுமார் 33,000 அடி உயரத்தில் ஏவுகணை மூலம் தாக்குதலுக்கு உள்ளானதாக உக்ரெய்னின் உள்துறை அமைச்சரின் ஆலோசகர் ஆண்டன் ஹெரஷெங்கோ தெரிவித்ததார் என அசோசியேட் செய்தி நிறுவனம் கூறியிருக்கிறது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►