தலைப்பிறையைத் தீர்மானிப்பதற்காக கொழும்பு பெரிய பள்ளிவாசலில் ஒன்றுகூடும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் மற்றும் ஏனைய அமைப்புக்களின் பிரதிநிதிகள் தீர்மானம் எடுத்து, அத்தீர்மானம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவையினூடாக பொது அறிவித்தல் செய்யப்படும்.
அந்த உத்தியோகபூர்வ அறிவித்தல் வெளிவரும் வரை வழமையான வணக்கங்களில் ஈடுபடுமாறு சகல முஸ்லிம்களும் வேண்டப்படுகிறார்கள்.
பிறைத் தீர்மானம், உத்தியோகப்பூர்வமாக தேசிய வானொலியின் மூலமே அறிவிக்கப்படும் என்பதையும் ஏனைய தகவல் ஊடகங்களான குறுஞ்செய்தி மற்றும் சமூக வலைத்தளங்கள் ஆகியன மூலம் வெளிவரும் தகவல்களுக்கு தலைப் பிறையைத் தீர்மானிக்கும் அமைப்பான கொழும்பு பெரியபள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் போன்றன எவ்விதத்திலும் பொறுப்பில்லை என்பதையும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply