அல்பிட்டிய பகுதியில் நேற்று அதிகாலை கொலைசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவியின் சடலம்
நியாகமவில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு இன்று கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலிஸர் தெரிவித்தனர்.
22 வயதான கே.எ.டிமாஷா கயனிகி என்ற மாணவி அல்பிட்டிய பஸ்தரிப்பிடத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றுக்குள் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இன்று
அவரின் வீட்டுக்கு பூதவுடல் கொண்டு செல்லப்பட்டதும், உறவினர்கள்,நண்பர்கள்
மற்றும் பிரதேசவாசிகள் என பலரும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
கொழும்பில்
பிரத்தியேக வகுப்பொன்றில் கற்பிப்பதற்காக நேற்று அதிகாலை தனது
வீட்டிலிருந்து சென்று பஸ்ஸில் சென்ற இவர் அல்பிட்டிய பகுதியில்
இறங்கியுள்ளார்.
டிமாஷாவின் கொலைச்சம்பவம் தொடர்பில் அவரது காதலரான 24 வயதுடைய இராணுவச்சிப்பாய் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று
கைது செய்யப்பட்ட அவர் இன்று அல்பிட்டிய பதில் நீதவான் ஜனக்க ருவண்புர
முன்னிலையில் அஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
48 மணித்தியாலங்கள் சந்தேகநபரை தடுத்துவைத்து விசாரணை செய்ய நீதவான் அனுமதி வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரவித்தனர்.
இந்த
கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்ப்படும் கத்தி ஒன்றினை கொழும்பில்
கடையொன்றில் கொள்வனவு செய்தாக சந்தேகநபர் விசாரணைகளின் போது பொலிஸாரிடம்
தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள விசேட பொலிஸ் குழு கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, May 25, 2014
எல்பிட்டிய நகரில் கொலைசெய்யப்பட்ட மாணவியின் சடலம் அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
நீர்நிலைகளில் வாழும் உயிரினம் முதலை. சேறு மற்றும் மண் நிறைந்த நீர்நிலையில் வசித்து வந்த முதலை ஒன்று மதிய வேளையில் இரை தேடி அலைந்து கொண்ட...
-
திருகோணமலை புல்மோட்டை பிரதான வீதியில் இக்பால் நகர் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரி...
-
செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனமும் சாய்ந்தமருது இணையத்தளமும் இணைந்து மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி வகுப்பினை இன்று நடாத்தியது.
-
கொழும்பு 12 மற்றும் கொழும்பு 15 ஆகிய பிரதேசங்களுக்கு இன்றிரவு 8 மணிமுதல் நாளை அதிகாலை 6 மணி வரை 10 மணித்தியாலங்கள் நீர்விநியோகம் தடைப்படு...

No comments:
Post a Comment
Leave A Reply