blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, April 2, 2014

குர்ரம் ஷேக் கொலை வழக்கு: முக்கிய அரசு தரப்பு சாட்சி வாக்குமூலம்

இலங்கையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் தொண்டு நிறுவனம் ஒன்றின் ஊழியராக இருந்த குர்ரம் ஷேக்கைக் கொன்று, அவருடைய ரஷ்யக் காதலி கூட்டுப் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆறு பேருக்கு எதிரான வழக்கில், சம்பவம் நடந்த தங்காலையிலுள்ள உல்லாச விடுதியின் மேலாளராக இருந்த தரங்கா பீரிஸ் என்ற பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

2011ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் நாளுக்கு முந்தைய இரவு, அவ்விடுதியில் நடந்த களியாட்ட விருந்தொன்றின்போது நிகழ்ந்த சம்பவங்கள் பற்றி அந்தப் பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆறேழு பேர் சேர்ந்து ஒருவரை தாக்கிக்கொண்டிருக்க, குர்ரம் ஷேக் அதனைத் தடுக்க முயன்றிருந்தார் என்றும், அந்த விவகாரத்தில் தலையிட வேண்டாம் என குர்ரம் ஷேக்கை தான் தடுக்க முயன்றும் அவர் அந்த சண்டையை நிறுத்த முயன்றதாகவும், அப்போது அந்தக் கும்பல் குர்ரம் ஷேக்கையும் தாக்கியது என்றும் தரங்கா பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அப்போது தப்பி ஓடிய குர்ரம் ஷேக்கை விரட்டிச் சென்று அக்கும்பல் தாக்கியதாகவும், பின்னர் குர்ரம் ஷேக் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை தான் கண்டதாகவும் அவர் கூறினார்.

குர்ரம் ஷேக்கை தாக்கிய கும்பலில் இருந்ததாக விதானபத்திரன மற்றும் லஹிரு கெலும் என்பவரை அவர் அடையாளம் காட்டினார்.
குர்ரம் ஷேக்கின் காதலியும் தாக்கப்பட்டு அவரும் தரையில் கிடந்ததை தான் கண்டதாக அரசுதரப்பு சாட்சியான தரங்கா பீரிஸ் தெரிவித்தார்.
உதவிக்கு பொலிசாரை அழைக்க தான் முயன்றபோது லஹிரு கெலும் என்பவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி தன்னைத் தடுத்துவிட்டதாக அவர் வாக்குமூலம் அளித்தார்.இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஏப்ரல் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►