blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, April 5, 2014

"பொலிஸ் நிர்வாக முறைகேடுகளை நேரடியாக உச்சநீதிமன்றம் கொண்டுவர வேண்டாம்"

இலங்கையின் பொலிஸ் திணைக்கள நிர்வாகத்தில் ஏற்படும் முறைகேடுகள் சம்பந்தமான புகார்களை நேரடியாக உச்சநீதிமன்றம் முன் கொண்டுவருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு தலைமை நீதிபதி மொஹான் பீரிஸ் அறிவித்தார்.
பிரதான போலிஸ் பரிசோதகர் நியமனங்களின்போது முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டி போலிஸ் அதிகாரிகள் சிலர் தாக்கல் செய்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே தலைமை நீதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

"பொலிஸ் திணைக்களத்தில் நியமனங்கள், பதவி உயர்வுகள் மற்றும் இட மாற்றங்கள் மேட்கொள்ளபட்டவுடன் சில பொலிஸ் அதிகாரிகள் உச்சநீதிமன்றம் முன் வந்து மனுக்களை தாக்கல் செய்கின்றனர். இதனை எம்மால் அனுமதிக்க முடியாது. இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் போலிஸ் திணைக்கள நிர்வாகம் சீர்குலையும் வாய்ப்பு இருக்கிறது. 

முறைகேடுகள் சம்பந்தமான புகார்களை அரச சேவை ஆணைக்குழுவிடமோ இல்லாவிட்டால் அரச நிர்வாக மேன்முறையிட்டு குழுவிடமோ சமர்பிக்க முடியும். அதனைத் தவிர்த்து இவ்வாறான புகார்களை நேரடியாக உச்சநீதிமன்றம் முன் கொண்டுவருவதை எம்மால் வரவேற்க முடியாது." என தலைமை நீதிபதி மொஹான் பீரிஸ் தெரிவித்தார்.
ஆயினும் சம்பந்தப்பட்ட மனுக்களை எதிர்வரும் ஜூன் மாதம் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தலைமை நீதிபதி அறிவித்தார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►