இலங்கையில் கிழக்கு மாகாண பாடசாலைகளில் ஆரம்ப கல்வி பாரிய பின்னடைவு
காண்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி கூறுகின்றார்.
சமீபத்தில் வெளியான 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மேற்கோள்காட்டி இதனை அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள 98 கல்வி வலயங்களில் 95 தொடக்கம் 98 வரையிலான கடைசி நான்கு இடங்களிலும் கிழக்கு மாகாணத்திலுள்ள கல்வி வலயங்கள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது.
நகரை அண்மித்த கல்வி வலயங்களில் சற்று முன்னேற்றம் இருந்தாலும் இது ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும் போது ஆரம்பக் கல்வியில் பாரிய வீழ்ச்சியை காட்டுகின்றது என்கின்றார் மாகாண கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி .
கிராமப் புற பாடசாலைகளில் ஆரம்ப கல்வி கற்பதற்கு தகுதியான ஆசிரியர்கள் முன்வராமை போன்றனவே இதற்கு காரணம் என கல்வி அதிகாரிகள் கூறுகின்றார்கள்.
நகரங்களிலும் நகரை அண்மித்த சில பாடசாலைகளிலும் மேலதிகமாக ஆசிரியர்கள் இருப்பதாகவும் அவர்களால் சுட்டிக்காட்டப்படுகின்து.
ஆரம்பக் கல்வியில் ஏற்பட்டுள்ள இந்த பின்னடைவுக்கு சில காரணங்கள் தங்களால் கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் எம். ரி. ஏ நிசாம் தெரிவிக்கின்றார்.
மாகாணத்தில் ஆரம்பக் கல்வி ஆசிரியர்களுக்கு பற்றாக் குறை இல்லாத போதிலும் ஆரம்பக் கல்விக்கான பயிற்சி பெற்ற ஆசிரியர்களில் பலரும் இடை நிலை வகுப்புகளுக்கு கற்பித்தல் ஒரு காரணமாக கண்டறிப்பட்டுள்ளது.
BBC - Tamil
No comments:
Post a Comment
Leave A Reply