blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, November 2, 2015

மெண்டிஸ் அபார துடுப்பாட்டம் : முதல் போட்டியில் மே.தீவுகளை வீழ்த்தியது இலங்கை

மேற்­கிந்­தியத் தீவுகள் அணிக்­கெ­தி­ரான முத­லா­வது ஒருநாள் போட்­டியில் இலங்கை அணி ஒரு விக்கெட் வித்­தி­யா­சத்தில் வெற்­றி­பெற்­றது.


3போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முத­லா­வது போட்டி கொழும்பு ஆர்.பிரே­ம­தாஸ மைதா­னத்தில் நேற்று நடந்­தது.

இந்தப் போட்­டியில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்ற இலங்கை அணிஇ முதலில் மேற்­கிந்­தியத் தீவுகள் அணியை துடுப்­பெ­டுத்­தா­டு­மாறு பணித்­தது.

பிற்­பகல் 2.30 மணிக்கு ஆரம்­ப­மா­க­வி­ருந்த நேற்­றைய போட்டி மழை கார­ண­மாக சற்று பிந்­தியே ஆரம்­ப­மா­னது. அதன்­படி மேற்­கிந்­தியத் தீவு­களின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்­க­ளாக பிௌட்சர் மற்றும் சார்லஸ் ஆகியோர் கள­மி­றங்­கினர். இந்த இரு­வ­ரையும் இலங்கை அணியின் பந்­து­வீச்­சாளர் லக்மால் வீழ்த்­தினார்.

இந்த இரு­வரும் முறையே 3 மற்றும் ஒரு ஓட்­டத்­துடன் வெளி­யே­றினர். அதன்­பி­றகு ஜோடி­சேர்ந்த பிராவோ மற்றும் சாமு­வெல்­சையும் பிரித்தார் லக்மால். இதில் சாமுவெல்ஸ் 2 ஓட்­டத்­துடன் ஆட்­ட­மி­ழந்தார்.

மேற்­கிந்­தியத் தீவுகள் அணி 40 ஓட்­டங்­க­ளுக்கு 3 விக்­கெட்­டுக்­களை இழந்து தடு­மா­றிக்­கொண்­டி­ருக்க மழை குறுக்­கிட்­டது. இதனால் போட்டி நீண்ட நேரத்­திற்கு இடை நிறுத்­தி­வைக்­கப்­பட்­டது. மீண்டும் 26 ஓவர்­க­ளுக்கு மட்­டுப்­ப­டுத்­தப்­பட்டு போட்டி 8.30 மணிக்கு ஆரம்­ப­மா­னது.

அதன்­பிறகு அதி­ர­டி­யாக ஆடிய பிராவோ 38 ஓட்­டங்­க­ளு­டனும் ரசல் 41 ஓட்­டங்­க­ளு­டனும் அணித் தலைவர் ஹோல்டர் 36 ஓட்­டங்­க­ளையும் பெற்று ஆட்­ட­மி­ழந்­தனர்.
நிர்­ண­யிக்­கப்­பட்ட 26 ஓவர்கள் நிறைவில் மேற்­கிந்­தி­யத்­தீ­வுகள் அணி 8 விக்­கெட்­டுக்­களை இழந்து 159 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டது.
பந்­து­வீச்சில் அசத்­திய சுரங்க லக்மால் 3 விக்­கெட்­டுக்­க­ளையும் அசந்த மெண்டிஸ் 2 விக்­கெட்­டுக்­க­ளையும் வீழ்த்­தினர்.

இலங்கை அணிக்கு டக்வோர்த் லூயிஸ் முறைப்­படி 26 ஓவர்­க­ளுக்கு 163 ஓட்­டங்கள் வெற்றி இலக்­காக நிர்­ண­யிக்­கப்­பட்­டது.
இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளான டில்ஷான் மற்றும் குசல் ஆகி­யோரின் அதி­ர­டியில் இலங்கை அணி ஆரம்பம் முதலே சீரான ஓட்டச் சேர்க்­கையைப் பெற்­றுக்­கொண்­டது.

அதன்­பி­றகு குசல் 14 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்கஇ டில்ஷான் அதி­ர­டி­யாக ஆடி 6 பவுண்­ட­ரிகள் மற்றும் 3 சிக்­ஸர்கள் அடங்­கலாக 59 ஓட்­டங்­களை விளா­சினார். அதன்­பி­றகு திரி­மான்ன (17)இ மெத்­தியூஸ் (13)இ குண­தி­லக்க(12)இ சிறி­வர்­தன(7)இ ஜசூ­ரிய(0) என சொற்ப ஓட்­டங்­க­ளுடன் அடுத்­த­டுத்து இலங்கை அணி வெற்­றி­பெ­றுமா என்ற சந்­தேகம் எழுந்­தது.

இறு­தியில் அஜந்த மெண்டிஸ் அபார ஆட்டத்தினால் இலங்கை அணி ஒரு விக்கெட்டால் வெற்றிபெற்றது. 5 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில்இ கிடைத்த ப்ரீ ஹிட்டைப் பயன்படுத்திக்கொண்ட அஜந்த மெண்டிஸ் சிக்ஸர் ஒன்றை விளாசி இலங்கைக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.அஜந்த மெண்டிஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 21 ஓட்டங்
களைப் பெற்றுக்கொண்டார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►