தமது விடுதலைக்காக யாரும் உயிர்த் தியாகம்
செய்ய வேண்டாம். இவ்வாறு உயிர்த் தியாகம் செய்வது எமக்கு
வேதனையளிக்கின்றது என செய்வதனை என தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகள் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே இதனை தெரிவித்துள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகளினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விடயங்களாவன,
'அகால மரணமடைந்த மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரனின் மரணம் தொடர்பாக........
தமிழ் அரசியல் கைதிகளாகிய எமது விடுதலையை கோரி தன்னுயிரை தியாகம் செய்த
மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரனுக்கு நாடு முழுவதும் உள்ள சிறைகளில் உள்ள
அனைத்து அரசியல் கைதிகளும் தங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களையும் அஞ்சலிகளையும்
செலுத்துவதோடு,
கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக குடும்பங்கள் மற்றும் உறவுகளையும்
பிரிந்து சிறைகளில் வேதனையில் வாடும் எங்களுக்கு இந்த மாணவனது திடீர்
உயிர்த்தியாகம் எங்களை மிகுந்த சோகத்தினையும் வேதனையையும் ஆழ்த்தியுள்ளது.
இவரது இழப்பு தொடர்பான எமது உணர்வுகளை எழுத்தில் சொல்லி மட்டுப்படுத்த முடியாது.
எனவே நாங்கள் மிகவும் ஆழ்ந்த வேதனையுடன் எமது அஞ்சலிகளை அந்த மாணவனது
குடும்பத்திற்கும் அவருக்கும் செலுத்துவதோடு, இனிமேலும் தமிழ் அரசியல்
கைதிகளின் விடுதலைக்காக யாரும் உயிர்த்தியாகம் செய்வதை ஒரு காலமும் தமிழ்
அரசியல் கைதிகளாகிய நாம் விரும்பவில்லை என்பதனை மனவருத்தத்துடன்
தெரிவித்துக்கொள்கின்றோம்.
மாறாக சாத்வீக வழியிலான அறவழிப் போராட்டங்களை முன்னெடுப்பதே சாலச்சிறந்தது என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இப்படியான சம்பவங்களை இனிமேல் தவிர்த்துக்கொள்ளுமாறு எங்களை நேசிக்கும்
மக்களாகிய உங்களை அரசியல் கைதிகளாகிய நாம் தாழ்மையுடன்
வேண்டிக்கொள்கின்றோம்.' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
செந்தூரனின் இறுதி கிரியைகள்
அரசியல் கைதிகளை விடுதலைசெய்ய கோரி நேற்றைய தினம் புகையிரதம் முன்பாக
பாய்ந்து தற்கொலை செய்த கொக்குவில் இந்து மாணவன் செந்தூரனின் இறுதி
கிரியைகள் இன்று மிக அமைதியான முறையில் நடைபெற்றது.
கோப்பாய் வடக்கில் உள்ள மாணவனின் வீட்டில் இறுதி நிகழ்வுகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து பூதவுடல் மாணவர்களால் சுமந்து வரப்பட்டு பூதவுடல்
அஞ்சலிக்காக மாணவன் கல்வி கற்ற தனியார் கல்வி நிறுவனத்தில் வைக்கப்பட்டு
கல்வி நிறுவன ஆசிரியர்கள் மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி நிகழ்வினையடுத்து கோப்பாய் கந்தன் காடு இந்து மயானத்தில் மாணவனின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது .
இறுதி நிகழ்வில் மாணவர்கள் அரசியல்வாதிகள் உறவினர்கள் மற்றும் ஊரவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மாணவனின் இறுதி நிகழ்வில் பெருமளவான புலனாய்வாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, November 28, 2015
'எமக்காக யாரும் உயிர்த் தியாகம் செய்யாதீர்கள்' : மனமுடைந்த அரசியல் கைதிகள்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
-
சீரற்ற வானிலை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ர...
-
இப்பரீட்சை பரீட்சை திணைக்களத்தினால் சிங்களம்,தமிழ் ஆகிய மொழிகள் மூலம் 2014.08.09 ஆம் திகதி நடாத்தப்படும்.
-
பிரான்ஸில் 14 வயதே ஆன சிறுமி ஒருவர் தனக்கு பிறந்த பச்சிளம் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply