மூவின மக்களின் நன்மதிப்பைப் பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
ஏ.ஆர்.எம்.ஏ.காதர் ஹாஜியாரின் மறைவு முஸ்லிம் சமூகத்திற்கும்
நாட்டிக்கும் பேரிழப்பாகும் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்
சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது அனுதாபச் செய்தி தெரிவித்துள்ளார்.
பிரதி அமைச்சர் தனது அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்:
கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான காதர் ஹாஜியார் ஜனாதிபதி
பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின்
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் முக்கியமானவர்.
பல்வேறு அமைச்சுப் பொறுப்புகளை வகித்த இவர். சகல இன மக்களுக்கும் சேவை ஆற்றியவர். குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு அளப்பெரிய சேவையாற்றியதுடன் முஸ்லிம்கள் முகம் கொடுத்த பிரச்சினைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்தவர்.
தனது அரசியல் வாழ்க்கையில் சகல இன அரசியல்வாதிகளுடனும் நல்லுறவை பேணி வந்தவர். இதனால் இவர் மூவின மக்களின் நன்மதிப்பையும் பெற்றார்.
அந்நாரின் மறைவையிட்டு துயருட்டிருக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அந்நாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.
யா அல்லாஹ் ! இந்த அடியானின் நன்மைகளை பொருந்திக் கொண்டு , அவருடைய
பாவங்களை மன்னித்து , அந்தப் பாவங்களை நன்மைகளாக மாற்றி சுவனத்தில்
புகுத்துவாயாக.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, October 4, 2015
மூவின மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர் காதர் ஹாஜியார் – பிரதி அமைச்சர் ஹரீஸ்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
-
சீரற்ற வானிலை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ர...
-
இப்பரீட்சை பரீட்சை திணைக்களத்தினால் சிங்களம்,தமிழ் ஆகிய மொழிகள் மூலம் 2014.08.09 ஆம் திகதி நடாத்தப்படும்.
-
பிரான்ஸில் 14 வயதே ஆன சிறுமி ஒருவர் தனக்கு பிறந்த பச்சிளம் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply