அதைத் தவிர தன் ஆட்சிகாலத்தில் தான் எடுத்த எந்த முடிவு குறித்தும் தனக்கு வருத்தமில்லை எனவும் மஹிந்த ராஜபக்ஷ பிபிசி சந்தேஷ்யவின் சரோஜ் பதிரணவிடம் கூறினார்.
இதேவேளை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தமது முன்னணிக்கு 117 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு தனக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையே மூன்று சந்திப்புகள் இடம்பெற்றதை அவர் உறுதிப்படுத்தும் அதேவேளை, மூன்றாவது சந்திப்பு ரகசியமானது, அது குறித்த விவரங்களை வெளியிட முடியாது எனவும் கூறினார்.
நாட்டில் ஜனாதிபதியாக உள்ளவர் எவ்வளவு முறை வேண்டுமானாலும் மீண்டும் அப்பதவிக்கு மீண்டும் போட்டியிடலாம் எனக் கூறும் சர்ச்சைக்குரிய 18ஆவது சட்டத் திருத்தத்தை கொண்டு வந்ததையும் அவர் நியாயபடுத்துகிறார்.
"புலிகளுக்கு பணம் கொடுக்கவில்லை"
முதல் முறையாக அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது, விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்தார் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறும் குற்றச்சாட்டையும் மஹிந்த ராஜபக்ஷ புறந்தள்ளுகிறார்.தனது ஆட்சிக் காலத்தில் சில ஊழல் பேர்வழிகளை தான் காப்பாற்றியுள்ளதையும் பிபிசியிடம் அவர் ஒப்புக் கொண்டார்.
ஊடகவியலாளர்கள் லசந்த விக்ரமதுங்க கொல்லப்பட்டதற்கும், பிரகீத் எக்நலிகொட காணமல் போனதற்கும் காரணமானவர்கள் தற்போதைய அரசில் உள்ளனர் என்று தான் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
THANK YOU - BBC
No comments:
Post a Comment
Leave A Reply