செய்தி: றினோஸ் ஹனீபா
தேசிய இளைஞர் மாநாடு தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்புகிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தேசிய இளைஞர் காங்கிரசின் தேசிய இணைப்பாளருமான அல்ஹாஜ் கௌரவ ஆரிப் சம்சுடீன் தலைமையில்
இன்று பரடைஸ் மண்டபம் சாய்ந்தமருதில் இடம் பெற்றது.
முஸ்லிம் காங்கிரஸின் தேசிய
இளைஞர் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் சம்மாந்துரை விலுனையடி மைதானத்தில் எதிர்வருகின்ற ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ளது இந்நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம் மற்றும் யு.என்.பியின் தலைவர் பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களும் விஷேட பிரதிநிதிகளாக கலந்து கொள்ளவுள்ளனர்.
இளைஞர் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் சம்மாந்துரை விலுனையடி மைதானத்தில் எதிர்வருகின்ற ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ளது இந்நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம் மற்றும் யு.என்.பியின் தலைவர் பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களும் விஷேட பிரதிநிதிகளாக கலந்து கொள்ளவுள்ளனர்.
இம்மாநாடு தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் கௌரவ ஹசனலி பேசும் போது எமது கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் அன்று எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபடாமல் ஜனநாயக ரீதியாக செயற்படுவதற்காக இளைஞர்களை கட்சியில் இணைத்துக் கொண்டார் அந்த நோக்கத்தினை அவர் அடைந்தார் அதேபோல தற்கால இளைஞர்கள் தான் சமூகத்தின் பொறுப்பினை சுமக்க வேண்டும் எமக்குப் பின்னர் அவர்கள் தான் கட்சியைக் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
தற்பொழு தேசிய இளைஞர் காங்கிரஸிக்கான தேசிய ஒருங்கினைப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அல் ஹாஜ் கௌரவ ஆரிப் சம்சுடீன் கருத்து தெரிவிக்கும் போது எமது இளைஞர்கள் தான் நாளைய தலைவர்கள் அவர்களை நாம் சரியான பாதையில் பயிற்றுவிக்க வேண்டிய அவசியம் உள்ளது இக்கட்சியின் வளர்ச்சியில் ஆரம்ப காலத்தில் இருந்து இளைஞர்கள்தான் பங்களிப்புச் செய்து வருகின்றார்கள் எனவே இளைஞர்களை தேசிய ரீதியாக இக்கட்சியில் ஒன்றினைப்பதற்கான வேலைத்திட்டங்களை எதிர்காலத்தில் சரியாக திட்டமிட்டு செய்யவுள்ளேன் என்றார்.
வேட்பாளர்களான கௌரவ மன்சுர் அவர்கள்,ஹரிஸ் மற்றும் பைசால் காசிம் பேசும் பொழுது நாங்கள் மூன்று பேரும் ஒற்றுமையாக இணைந்து பணியாற்றுகின்றோம் எமக்கிடையில் எந்த முரண்பாடும் இல்லை என்று குறிப்பிட்டார்கள் இந்நிகழ்வில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களான மன்சுர்,பைசல் காசிம், ஹரிஸ், மாகாண சபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுடீன், நசீர், மாநகர சபை பிரதி மேயர் மஜீத் மாநகர சபை உறுப்பினர்களான பிர்தௌஸ் மற்றும் பரகத், தேசியத் தலைவரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சுர் மற்றும் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment
Leave A Reply