blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, August 11, 2015

மலையக மக்களின் அவலநிலை!! மீளக்கிடைக்குமா???

இலங்கையின் மலையகப் பகுதியில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நாட்களுக்கு தோட்ட நிர்வாகத்தினால் சம்பளம் மறுக்கப்பட்டுள்ளது.


தோட்ட நிர்வாகங்கள் எடுத்துள்ள இந்த முடிவு காரணமாக இம்மாத சம்பளத்தில் 40-50% இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் கூறுகிறார்கள்.

மலையகத்தின் முன்னனி தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பின் பேரில் கடந்த மாதம் 6ம் திகதி தொடக்கம் 9 நாட்கள் தொடர்ந்து மெதுவாக தேயிலை பறிக்கும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தங்களின் இம்மாத சம்பளத்தில் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி காரணமாக நாளாந்த வாழ்வாதாரம், பிள்ளைகளின் கல்வி , கடன் மற்றும் சீட்டுப் பணம் செலுத்த முடியாத சூழல் எனப் பலவகையான நிதி நெருக்கடிகளை தாங்கள் எதிர்கொள்வதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

தற்போது அவர்களால் எதிர்கொள்கின்ற நிதி நெருக்கடியிலிருந்து அவர்கள் விடுபட குறைந்தது 6 மாதங்கள் ஆகும் எனக் கருதப்படுகிறது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த இழப்பு மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தொழிற்சங்க நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்திருந்த தொழிற்சங்கமே பொறுப்பு கூற வேண்டும் அவர்கள் கோருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலின் பின்பு தோட்ட நிர்வாகங்களுடன் இடம் பேறும் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையின் போது இதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என இது தொடர்பாக இ. தொ. கா. தலைவரான முத்து சிவலிங்கம் தெரிவிக்கின்றார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது இழந்த சம்பளத் தொகையை மீள பெற்றுக் கொடுக்க முடியும் என அவர் நம்பிக்கையும் தெரிவித்தார்.

Thank You BBC

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►