நல்லாட்சியில் நாட்டின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் 2, 3 வருடங்களுக்குள் இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக்கொள்ள முன்வருமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,
இதிலிருந்து எவரும் விலகிச்செல்ல முடியாது என்றும், விலகிச் செல்வது என்பது மக்களுக்கு எதிரான செயல் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
"இந்தியாவுடன் சிறந்த நட்புறவைப் பேணுவோம். இந்தியாவையும், சீனாவையும் சமநிலைப்படுத்தும் வகையில் எமது வெளியுறவுக் கொள்கை அமையாது'' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது வியடத்தில் தம்மிடம் ஒரு கொள்கை உள்ளதாகவும், அதற்கமைய முன்னோக்கிச் செல்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர் அலரி மாளிகையில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற முதலாவது விசேட ஊடக அறிவிப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அவர், மேலும் கூறியவை வருமாறு:- "கட்சிகள், எம்.பிக்களில் பெரும்பான்மையானோர் ஜனவரி 8ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். அதை மீண்டும் பின்னோக்கித் திருப்பமுடியாது. அதற்கமைய, இலங்கை அரசின் பிரதமராக கடமைகளைப் பொறுப்பேற்க நான் நடவடிக்கை எடுப்பேன். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்றுச் சந்தித்தேன்.
அவருடன் இணைந்து நல்லாட்சியை முன்னோக்கிக் கொண்டுசெல்ல நாம் செயற்படுவோம். விசேடமாக ஒரு வியடத்தை நான் குறிப்பிட விரும்புகின்றேன். இணக்கப்பாட்டு அரசொன்றைக் கொண்டுசெல்லவே நாம் இந்தத் தேர்தலில் போட்டியிட்டோம். நாட்டுமக்களின் பிரச்சினைகளைப் பார்த்து, அதைத் தீர்ப்பதற்கு நாடாளுமன்றத்தில் அனைவரையும் ஒன்றிணைக்கவேண்டும். அந்த வேலைத்திட்டத்திலிருந்து நாம் விலகமாட்டோம்.
அதைச் செய்வோம். இணக்கப்பாட்டு அரசுடன் முன்னோக்கிச் செல்ல இந்தச் சந்தர்ப்பத்தில், நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தம் அனைத்துக் கட்சிகளுக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன்.
எமக்கு ஜாதிக கர்த்தவ்ய இருக்கிறது. அரசின் அமைச்சுப் பதவிகள் அல்லது நாடாளுமன்றத்தில் புதிதாக உருவாக்கப்படவுள்ள பதவிகள் என இரு வழிமுறைகள் இருக்கின்றன. இதில் ஒரு மாற்றுவழியினூடாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்வோம். இந்த வேலைத்திட்டத்தை செய்ய நாடாளுமன்றத்தின் அனுமதியை நாம் கோருகின்றோம். விசேடமாக, இந்தச் சந்தர்ப்பத்தில், தற்போது இருக்கும் அமைச்சு மற்றும் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட பிரதியமைச்சுப் பதவிகளுக்கு மேலதிகமாக, நாடாளுமன்றத்தில் தெரிவுக்குழுக்களை உருவாக்குவோம்.
அதுபோல, மாவட்ட அபிவிருத்திக்காக மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழுவின் தலைவர்களாக எம்.பிக்களை நியமிப்போம். அரசியல்வாதிகள் இல்லாத கிராமிய ஆட்சிக்குழு, கொத்தனிக் கிராமங்களை உருவாக்குவோம். அதுபோல, சிவில் அமைப்புகளின் ஆலோசனைகளைப் பெறுவதற்காக ஆலோசனைக் குழுவொன்றையும் நியமிக்க பேச்சு நடத்துகின்றோம். இதற்கு சமயத் தலைவர்களுடன் அனைவரையும் இணைத்துக்கொள்வதே எனது தேவையாக உள்ளது.
பழைய அரசியலை ஒரு பக்கம் வைத்துவிட்டு, இந்த நாட்டின் அடிப்படைப் பிரச்சினை தொடர்பில் இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக்கொள்ள 2, 3 வருடங்கள் பார்ப்போம். எமது திட்டத்துக்காக மக்களிடம் ஆணையைக் கோரினோம்.
அதை நாடாளுமன்றத்தில் முன்வைத்து, தேசிய இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் கொள்கை வரைபொன்றை உருவாக்கவேண்டும். அதற்கு நாம் தயார். பிரதமராக நான் பதவியேற்றதன் பின்னர், ஜனாதிபதியுடன் இணைந்து ஏனைய கட்சித் தலைவர்களுடன் பேசி, இந்த இணக்கப்பாட்டு அரசைக் கொண்டுசெல்வோம். நாட்டைப் பற்றியும், மக்களைப் பற்றியும் சிந்தித்து ஒன்றிணைந்து செயற்பட முன்னோக்கி வாருங்கள்.
பிரிவினைக் கொள்கைக்கு நாம் இடமளிக்கமாட்டோம். இந்த நல்லாட்சியை அனுமதிக்குமாறுதான் நாம் நாடாளுமன்றத்தில் கேட்கிறோம். அதன் பின்னர் இணக்கப்பாட்டு அரசில் இணையுங்கள். எவரும் இதிலிருந்து விலகிச்செல்ல முடியாது.
விலகிச்செல்வது என்பது மக்களுக்கு எதிரானது. தமது பிரச்சினைகளைத் தீர்ப்பதே மக்களின் தேவையாக உள்ளது. நாம் இந்தச் சந்தர்ப்பத்தில் மிகவும், நீதியான சமாதான தேர்தலொன்றுக்கு முகங்கொடுத்தோம். எந்தப் பிரச்சினையும் இல்லை. இது தற்காலிக சம்பவம் அல்ல.
சமூகத்தில் எப்போதும் இருக்கவேண்டும். முன்னோக்கிச் சென்று நாட்டின் இளைஞர், யுவதிகளின் பிரச்சினைகளைத் தீர்த்து, துன்பங்களை அனுபவிக்கும் சாதாரண மக்களது பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆட்சியை நாம் உருவாக்குவோம். இதனூடாக புதிய கட்சி அரசியலை உருவாக்க எம்மால் முடியும். அதுதான் எனது நோக்கம்" - என்றார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, August 20, 2015
அடிப்படைப் பிரச்சினைகளுக்கு 3 வருடங்களுக்குள் தீர்வு!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கவிக்கோ அப்துல் ரஹ்மான் பவள விழா (75ஆம் ஆண்டு) தொடக்க உரையின் போது பொழிந்த கவி...
-
பள்ளி வாழ்வில் இருந்து தொலைந்த நண்பர்கள், வாழ வழி தேடி கடல் கடந்து சென்ற நம் ஊர் உறவுகள் என அனைவரையும்
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
-
சீரற்ற வானிலை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ர...
No comments:
Post a Comment
Leave A Reply