மகிந்தராஜபக்ஷ மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மீண்டும் அரசியலுக்கு வர முயற்சிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜே.வி. பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி இதனைத் தெரிவித்துள்ளார்.
மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு பிரதமராக தெரிவாவதற்கு மகிந்தராஜபக்ஷ முயற்சிக்கிறார்.
மக்களின் அழைப்பின் பேரிலேயே தாம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் கூறுகிறார்.
ஆனாலும், அவரது உள்நோக்கம் வேறு என்று ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில்
தற்போது பல்வேறு சக்திகள் ஐக்கிய தேசிய கட்சியின் பால் திரும்பி இருப்பதாக
அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
இதனால் மகிந்தவின் மீள்வருகை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சுதந்திர கட்சியில் தற்போது இரண்டு பிரிவுகள் இல்லை என்று, முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும கூறியுள்ளார்.
மகிந்தவுக்கு வேட்புரிமை வழங்கியதன் பின்னர், இந்த பிளவு தவிர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, July 5, 2015
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் தாழங்குடா பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 23 பே...
-
தற்போது அமெரிக்கா வான்வழித் தாக்குதலை நடத்தக் கூடும் என்ற நிலையில் பாக்தாத் நோக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் வேகம் சற்று கு...
-
செக்றோ ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவரும் காமராஜ் பல்கலைக்கழகத்தின் கல்முனைக்கிளைக்கான இணைப்பாளருமான றினோஸ் ஹனீபா தனது அறிக்கையில் குறிப்...

No comments:
Post a Comment
Leave A Reply