மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தளவாய்க் கிராமத்தில் விதவைப் பெண் ஒருவரின் வீட்டுக்கு தீ வைத்து எரித்துள்ள சம்பவம் தொடர்பில் 03 இளைஞர்களைக் கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
தொடர்ந்து அந்தக் குடும்பத்துக்கு இம்சை கொடுத்து வந்த தளவாய் கோயில் வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரும் அவரது நண்பர்கள் இருவருமே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
தளவாய்க் கிராத்தைச் சேர்ந்த 37 வயதுடைய கணவனை இழந்த 03 பிள்ளைகளின் தாயான குறித்த பெண் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து அவரது வீட்டுக்கு தீ வைத்துள்ளனர்.
அத்துடன், வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கியதுடன் வீட்டின் வளவில் இருந்த பயன் தரும் மரங்களுக்கும் தீ வைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தினால் சுமார் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கமைவாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் இன்று காலை குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுமுள்ளனர்.
இந்நிலையில் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
@ East news first
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, June 26, 2015
ஏறாவூரில் விதவை பெண் வீட்டிற்கு தீ வைப்பு: இளைஞர்கள் மூவர் கைது
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
வவுனியா நெடுங்கேணி வன பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் பின்னர் 3 சடலங்கள் மீட்கப்பட்டது. அதில் கோபி, தேவியன் இருவரின் சடலங்கள் கண்டற...
-
சச்சின் டெண்டுல்கரைத் தெரியாது என்று கூறி ரஷ்ய டென்னிஸ் நட்சத்திரம் மரியா ஷரபோவா கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார்.
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தளவாய்க் கிராமத்தில் விதவைப் பெண் ஒருவரின் வீட்டுக்கு தீ வைத்து எரித்துள்ள சம்பவ...
-
அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

No comments:
Post a Comment
Leave A Reply