இலங்கைக்கு வருகைதந்துள்ள இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் சிறப்புக்கருத்தரங்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணியளவில் ஆரம்பித்துள்ளது.
மின்சக்தி எரிசக்தி அமைச்சின் விஷேட அழைப்பின் பேரில் வருகை தந்துள்ள அப்துல்கலாம், இலங்கையில் நடைபெறும் மின்சக்தி எரிசக்தி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் இலங்கையின் ‘எதிர்கால தலைவர்கள்’ என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், மின்சக்தி மற்றும் சக்தி வலு தொடர்பில் சிறப்பு உரை வழங்கவுள்ளார். மேலும் இந்த மாநாட்டில் சுமார் 1500 இற்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நேற்று (வியாழக்கிழமை) இரவு இலங்கையை வந்தடைந்திருந்த அப்துல் கலாம், இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் உயர் மட்ட தலைவர்கள் உள்ளிட்ட பலரை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
@ EAST NEWS FIRST
No comments:
Post a Comment
Leave A Reply