blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, April 1, 2015

கழிவறைக்குள் கொடூரக்கொலை!!! தாயே, 20 மாத குழந்தயை சிதைத்த பரிதாபம்!

அமெரிக்காவில் தாய் ஒருவர் ஹொட்டல் கழிவறையில் வைத்து தனது குழந்தையை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவின் மிட்டவுனில் உள்ள போரோ பர்கர் ஹொட்டலுக்கு, லிதிஷா பிஷர் ( Latisha Fisher Age - 35 ) என்ற பெண் தனது 20 மாத மகன் காவிரியல் ஆர்டிஸ்சுடன்(Gavriel Ortiz) சென்றுள்ளார்.

சிறிது நேரத்தில் தனது மகனின் வாயை கைகளால் மூடி ஹொட்டலின் கழிவறைக்குள் கொண்டு சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டல் ஊழியர்கள் கழிவறையை சூழ்ந்து கொண்டு சத்தம் போட்டனர்.

ஆனால், லிதிஷா கழிவறையின் கதவை உள்பக்கமாக பூட்டி கொண்டார், பின்னர் தொழிலாளர்கள் கதவை உடைத்து திறந்தபோது, குழந்தை மயங்கிய நிலையில் இருந்தது.

உடனடியாக ஊழியர்கள் குழந்தைக்கு முதலுதவி அளிக்க முயன்றனர். ஆனால் அதை லிதிஷா தடுத்து விட்டார். பின்னர் குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து லிதிஷாவை கைது செய்த பொலிசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►