சீகிரிய கண்ணாடிச் சுவரில் கிறுக்கிய குற்றத்திற்காக சிறை வைக்கப்பட்டுள்ள யுவதிக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது.
குறித்த யுவதிக்கு பொது மன்னிப்பு அளிக்கும் ஆவணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி 14ஆம் திகதியன்று மட்டக்களப்பை சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறி என்ற யுவதி, சீகிரிய ஓவியங்கள் மீது கிறுக்கியிருந்தார்.
இந்தக் குற்றத்துக்காக குறித்த யுவதிக்கு இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேசிய அகழ்வாராய்ச்சி பொருட்களை பாதுகாக்கும் அதேநேரம் அறியாமை காரணமாக உதயசிறி செய்த தவறை உணர வேண்டும் என்று ஏற்கனவே வெளியுறவுத்துறையின் பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்திருந்தார்.
இதேவேளை, தமது மகளின் அறியாமையை உணர்ந்து அவளை மன்னிக்குமாறு உதயசிறியின் 74 வயது தாயும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, April 2, 2015
சீகிரிய கண்ணாடிச் சுவரில் கிறுக்கிய யுவதிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சாவகச்சேரி நகரசபையால் 74 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத்தை இன்று காலை 9.30 மணிக்கு வடக்குமாகாண முதலமைச்சர் க.வி....
-
கம்பஹா மாவட்டத்தில் உள்ள உற்பத்தி நிலையம் ஒன்றிலிருந்து மண்ணெண்ணெய் கலந்த தண்ணீர் போத்தல்களை நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபையினர் கைப்பற்ற...
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிலோன்டொபாகோ நிறுவனத்தின் அதிகாரிகள் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்தியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன த...
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச இருபதுக்கு- 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 9 ஓட்டங்களால் வெற்றியீட்ட...
No comments:
Post a Comment
Leave A Reply