முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும், அவரது மகன் யோசித்த ராஜபக்சவிற்கும் மரணஅச்சுறுத்தல் காணப்படுவதாகவும்,
இதன் காரணமாகவே யோசித்த, மஹிந்தவின் பாதுகாப்புப் பிரிவிற்கு மாற்றப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மரண அச்சுறுத்தல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த விசேட குழுவொன்று நியமிக்கப்பட உள்ளது.
இது தொடர்பிலான விசாரணை நடத்தும் விசாரணை குழுவின் இறுதி அறிக்கை இன்னமும் கிடைக்கவில்லை.
காணப்படும் உயிர் அச்சுறுத்தல்கள் தொடர்பில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
அவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள ஏனைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தனியான விசாரணைகள் நடத்தப்படும்.
போரின் போது பயங்கரவாத இயக்கமொன்றை தோற்கடித்த ஜனாதிபதிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் எவ்வித மரண அச்சுறுத்தலும் கிடையாது என எவரும் கூறினால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் மற்றும் மரண அச்சுறுத்தல் ஆகியன இரு வேறு விடயங்கள் என அவர் தெரிவித்துள்ளதாக சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு 108 பேரைக் கொண்ட விசேட பிரிவு ஒன்றினால் பாதுகாப்பு வழங்கப்படுகின்றது.
இதற்கு பொலிஸாரைப் போன்றே முப்படையினரும் உள்ளடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, March 1, 2015
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் |||ஆம் தரத்திர்க்கு சேர்த்துக்கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை..
-
Interview May 3,4 Contact: 071 5262026 G.C.E O/L Students can participate
No comments:
Post a Comment
Leave A Reply