blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, February 7, 2015

கிழக்கு மக்கள் மடையர்களா? விழித்துக் கொள்ளுங்கள் அன்பு உறவுகளே! ஒரு பாமரனின் உளக்குமுறல்

ஹக்கீமும் அவரின் சகபாடிகளும் முழு இலங்கை முஸ்லிம்களையும் முட்டாளாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக, ஹக்கீமின் முனாபிக் கும்பல் கிழக்கு மக்களை மடையர்களாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

தனது சுயநல அரசியலை செவ்வனே செய்வதற்கு எமது மக்களை பகடைக்காய்களாக தயாரித்து, பசப்பு வார்த்தைகளால் கிழக்கு மக்களின் தலையில் மிளகாய் அரைக்க இந்த துரோகி வலம் வருகிறார்.

அன்பு உறவுகளே, கிழக்கு புத்தி ஜீவிகள் நிறைந்த மண். இங்கே யாரோ ஒரு பம்மாத்து பேர்வழியின் போலி நாடகங்களுக்கு நாம் காலத்திற்கு காலம் எமது பெறுமதி வாய்ந்த வாக்குகளை பயன்படுத்துவது எமது மாமனிதர் அஷ்ரஃப் அவர்களுக்கு நாம் செய்யும் மாபெரும் துரோகமாகும்.

கிழக்கில் இருந்து வாக்கு வேட்டையாடும் இந்த ஹக்கீம் எமது மக்களுக்கு கிழித்தது என்ன..? சாதாரணமாய் யோசித்துப் பாருங்கள் உறவுகளே. தனது சொந்தக் காசில் ஒரு சதம் கூட செலவழிக்காத ஒரு கஞ்சப் பேர் வழி இந்த மூக்காத் தலைவர். நாலு பேர் ஹோட்டலுக்குச் சாப்பிடப் போனால் 100 ரூபாய் பில் கொடுக்கவே யோசிக்கும் திராணியற்ற மனிதர் இவர்.

ஆனால், எமது பெரும் தலைவன் அஷ்ரப் இப்படியில்லை. சாப்பிடும் தருணத்தில் அவரைச் சந்திக்கப் போனால் தனக்கு இல்லாவிட்டாலும் இருப்பதில் மற்றவரை உபசரித்து அதில் ஆன்ந்தம் காணும் அற்புத மனிதர்.

அதுமட்டுமா..? அட்டாளைச்சேனையில் மசூர் சின்னலெப்பை எனும் அப்பாவி மனுசனுக்கு ‘எம்பி’ பதவி தாறேன் என்று பல முறை வாக்கு கொடுத்து மசூரின் அத்தனை சொத்து பத்துகளையும் விற்க வைத்து எலக்‌ஷன் கேட்க வைத்து, கூட்டம் நடாத்த வைத்து, ஊருக்கெல்லாம் சாப்பாடு போட வைத்து கடைசியில் அந்த மனுஷன் மசூர் கவலை கக்கிசத்தில் வருத்தப்பட்டு மௌத்தாகிப் போனார்.

அதைப்போல, எத்தனை பேரை நம்ப வைத்து கழுத்தறுத்திக்கின்றார் இந்தத் தானைத்தலைவர், பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே போகும். கல்முனையில் ஜவாத்தை இருக்கும் சொத்தையெல்லாம் விற்க வைத்து ஓட்டாண்டி ஆக்கி இப்போது ஜவாத் அரசியலில் அனாதை ஆக்கப்பட்டிருக்கிறார். அது போல, சாய்ந்தமருதில் சிராஸ் பாவம். சிராஸை உஷார் மடையனாக்கி செலவழிக்க வைத்து இப்போது அரசனுமில்லை,புருசனுமில்லை எனும் நிலமைக்கு ஆளாக்கியிருக்கிறார் இந்தச் சாணக்கியர். இப்போது ஜமீல், ஜமீலும் பாவம். இவருக்காய் இழந்தது அதிகம் தான்.

ஹாபிஸ் நசீர் ஒரு நல்ல மனிதன் என்றால் சந்தோசப்படலாம். ஆனால், அவர் ஒரு அரசியல் வியாபாரி.தலைவர் அஷ்ரபுக்கு துரோகம் இழைத்தவர். இப்படி அவர் பற்றிய வரலாறு அதிகம் மக்களே. எனவே, இந்த முறை பொதுத் தேர்தலில் இந்த முனாபிக் கும்பல்கள் கூடி குலாவும் உருப்படியில்லத மு.கா.வை கிழக்கில் இருந்து புறக்கணித்து ஓட வைக்க வேண்டும். ஒரு தரம் தோல்வியை ருசிக்க வைத்து இவர்கலுக்கு தக்க பாட புகட்ட வேண்டும்.

கிழக்கு மக்கள் மடையர்கள் என எண்ணிக் கொண்டு, எம்மை சீண்டிக் கொண்டிருக்கும் ஹக்கீம் உள்ளிட்ட இந்த சுய நலக் கும்பலை மண் கவ்வச் செய்ய வேண்டும். பாவம், இந்தக் கட்சிக்காய் நாம் எவ்வளவோ இழந்து விட்டோம். எமது அரிய பொக்கிஷம் மாமனிதர் அஷ்ரபை இழந்தோம். அவரின் சேவைகளை இழந்தோம். ஹக்கீம் தலைவராகி, பின்னர் எத்தனையோ அமைச்சராகி உங்கட எங்கட ஊரில் ஏதாவது ஒரு சின்னக் கக்கூசு கட்டித் தந்திருக்கிறாரா..? எங்கள் தங்கத் தலைவன் அஷ்ரப் தந்த ஹார்பர் தொழில்கள் மூலம் தான் கிழக்கின் எத்தனையோ ஏழைக் குமருகள் நிம்மதி பெரு மூச்சு விட்டிருக்கின்றன.

எங்கள் தங்கம் அஷ்ரப் தந்த தொழிலில் பூஜ்ய சத வீதமாவது இவர் தந்திருக்கிறாரா..? கிழக்கு இவரால் அனுபவித்து என்ன? நல்லா யோசித்துப் பாருங்கள் உறவுகளே. எங்கலுக்குல் ஊர்ப் பகையை உருவாக்கி ராஜதந்திர அரசியல் காய் நகர்த்த கிழக்கு மக்களாகிய நாம் பகடைக்காய்களா..? நல்லா மனசில வச்சிக் கொள்ளுங்க, மு.காவை கிழக்கில் இருந்து இந்த முறை விரட்டி நாம் அந்தக் கட்சி எனும் தலைவர் அஷ்ரப்பின் அமானிதத்தை மறுபடியும் கைப்பற்ற வேண்டும்.

இளைஞர்களே, பெரியவர்களே, புத்திஜீவிகளே இது அவசியமானதும் அவசரமானதுமான அழைப்பாகும். அல்லாஹ்வுக்காக எல்லோரும் ஒன்று படுங்கள். நம்மை மடையனாக்க திட்டம் தீட்டிக் கொண்டிருப்பவரை நாம் மடையனாக்க வேண்டாமா?

கிழக்கு மாகாணத்தான் தலையில் மிளகாய் அரைக்கலாம் என்று எண்ணியிருப்பவர்களின் தலையில் நாம் மிளகாய் அரைக்க வேண்டாமா? போராளிகளே புறப்படுங்கள். இதை அனைவரும் பகிர்ந்து கொள்ளுங்கள். அல்லாஹு அக்பர்.

இப்படிக்கு,
காசிம் காக்கா.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►