blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, February 18, 2015

புலிகளின் தலைர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 1987 ஆம் ஆண்டு வழங்கிய பேட்டி வெளியானது!

Fronline_001இலங்கை சுங்க திணைக்களத்தினால், தடுத்து வைக்கப்பட்டிருந்த புரெண்ட் லைன் சஞ்சிகை தொகை விடுவிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று உத்தரவிட்டுள்ளார்.

புரெண்ட் லைன் சஞ்சிகையை தடுத்து வைக்கும் சுங்க திணைக்களம் தீர்மானம் நல்லாட்சியின் ஒரு பகுதியான ஊடக சுதந்திரம் தொடர்பான கொள்கைக்கு முரணானது என்பதால், அவற்றை விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

புரெண்ட் லைன் சஞ்சிகை தனது புதிய வெளியிட்டில், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 1987 ஆம் ஆண்டு வழங்கிய பேட்டி மறுப்பதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து முன்னதாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்த ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க. புரெண்ட் லைன் சஞ்சிகையின் புதிய பதிப்பில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பேட்டி மீண்டும் வெளியிடப்பட்டிருந்தால், அதனை சுங்க திணைக்களம் தடுத்து வைத்துள்ளதாக கூறினார்.

சஞ்சிகையின் பிரதிகள் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பின்னர் ஊடகத்துறை அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சுங்க அதிகாரி பரணவித்தான நேற்று தெரிவித்திருந்தார் புரெண்ட் லைன் சஞ்சிகை, இந்தியாவில் வெளியாகும் இந்து பத்திரிகையின் ஒரு வெளியீடாகும்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►