நாட்டை பிரிப்பதற்கே எதிரணி உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டை காப்பாற்றுவது அனைத்து மக்களதும் கடமையாகும். எனவே, ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்கள் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என்ற வேறுபாடின்றி ஒன்றிணைய வேண்டும்.
மஹிந்த ராஜபக் ஷவை வீழ்த்தி விடக்கூடாது. அவ்வாறான சூழ்நிலை உருவானால் மஹிந்த ராஜபக் ஷ உட்பட அனைவரும் பருப்பு சாப்பிட வேண்டியேற்படும் என பொதுபலசேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
கொழும்பு கிருலப்பனையில் அமைந்துள்ள பௌத்த மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது;
பொது எதிரணியினர் நாட்டை மீண்டும் பழைய நிலைக்கு ஒரு பயங்கரவாத சூழ்நிலைக்கு கொண்டு செல்லவே திட்டமிட்டுள்ளனர்.
எனவே, மக்கள் தமது அரசியல் கட்சிகளையும் நிறங்களையும் மறந்து பாதுகாப்பான வளமான எதிர்காலத்துக்காக தமது வாக்குகளை பயன்படுத்த வேண்டும்.
மேற்கத்தேய தூதுவராலயங்கள் சிலவும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இணைந்து ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்தவை தோற்கடிக்க சதித்திட்டம் தீட்டி செயற்பட்டு வருகின்றன. நாட்டை துண்டாட வேண்டுமென்பதே சர்வதேசத்தின் இலக்காகும். நாட்டின் தலைவரையும் குடும்பத்தையும் குடும்பத்தையும் அவரது பிள்ளைகளையும் மிக மோசமாக தூஷித்து வைராக்கியத்தை உருவாக்கி தேர்தல் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தவறு.
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் முச்சக்கரவண்டி தரிப்பிடங்களில் முச்சக்கரவண்டி சாரதிகள் சிலர் மூலம் கட்டுக்கதைகள் பரப்பப்பட்டு வருகின்றன. மஹிந்த ராஜபக் ஷவை தோற்கடிக்க முடியாது என்பதனை உணர்ந்த இவர்கள் ஜனாதிபதியின் மீது சேறு பூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, January 6, 2015
வீழ்ந்தால் மஹிந்த உட்பட அனைவரும் பருப்பு சாப்பிட வேண்டியேற்படும்: கலகொட தேரர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் |||ஆம் தரத்திர்க்கு சேர்த்துக்கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை..
-
தலைமன்னார் பகுதியில் 10 வயதுச் சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பாடசாலை அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
-
கம்பஹா மாவட்டத்தில் உள்ள உற்பத்தி நிலையம் ஒன்றிலிருந்து மண்ணெண்ணெய் கலந்த தண்ணீர் போத்தல்களை நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபையினர் கைப்பற்ற...
-
நேற்று கல்முனை பிரதேச செயலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் தலைமையில் இடம்பெற்றது இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள்,
No comments:
Post a Comment
Leave A Reply