முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி சிரந்தி ராஜபக்ச மீது கையூட்டல் மற்றும் ஊழல்கள் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் உதவி காவல்துறை அதிகாரி வாஸ் குணவர்த்தனவின் மனைவியே இன்றைய தினம் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
திறைசேரியினால் 500 லட்சம் ரூபா பெறுமதியான 100 கிலோ தங்கம் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தமது கணவரான வாஸ் குணவர்த்தன விசாரணைகளை மேற்கொண்டார்
இதன்போது இந்த விற்பனையில் சிராந்தி ராஜபக்ச தொடர்புப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதன்போது உதவி காவல்துறை அதிபர் அனுர சேனாநாயக்க, விசாரணையை நிறுத்துமாறு உத்தரவிட்டார்.
அத்துடன் இந்த விடயம் பொய்யானது என்று கூறி ஊடகங்களுக்கு கருத்துரைக்குமாறும் தமது கணவரிடம் கோரப்பட்டது.
எனினும் அதனை மேற்கொள்ளாத நிலையிலேயே தமது கணவரும் மகனும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக வாஸ் குணவர்த்தனவின் மனைவியான சாமலி தெரிவித்துள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, January 26, 2015
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கவிக்கோ அப்துல் ரஹ்மான் பவள விழா (75ஆம் ஆண்டு) தொடக்க உரையின் போது பொழிந்த கவி...
-
பள்ளி வாழ்வில் இருந்து தொலைந்த நண்பர்கள், வாழ வழி தேடி கடல் கடந்து சென்ற நம் ஊர் உறவுகள் என அனைவரையும்
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
-
சீரற்ற வானிலை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ர...
No comments:
Post a Comment
Leave A Reply