எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, January 9, 2015
மூட்டை முடிச்சுக்களுடன் சொந்த ஊருக்கு புறப்பட்டார் மஹிந்த; 'தோல்வியுற்றாலும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருப்பேன்' - மஹிந்த
பதவியிழந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டையில் மெதமுலனவில் உள்ள தமது இல்லத்தை சென்றடைந்துள்ளார்.
முன்னதாக கொழும்பில் இதுவரை அவர் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையில் இருந்த அவரது உடைகள் மற்றும் பாவனைப் பொருட்கள் அவசர அவசரமாக அங்கிருந்து பொதி செய்யப்பட்டு மெதமுலன இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
Bin Bag ஆகப் பயன்படுத்தப்படும் கறுப்பு பைகளிலே அவை அவசர அவசரமாகச் சேகரித்துக் கட்டப்பட்டு வாகனம் ஒன்றில் ஏற்றி மெதமுலனவுக்கு அனுப்பப்பட்டன.
அவை மெதமுலனவில் உள்ள ராஜபக்ஷவின் குடும்ப இல்லத்தில் இறக்கப்பட்டு உள்ளே எடுத்துச் செல்லப்பட்டன.
இதுவரை காலமும் ஜனாதிபதி என்ற முறையில் கொழும்பு அலரி மாளிகை இல்லத்துக்கு அருகில் இருந்து ஹெலிக்கொப்டர் மூலமும் மெதமுலனவுக்குச் சென்று வந்த மஹிந்த ராஜபக்ஷ தம்பதியினர் இன்று தமது காரில் கொழும்பிலிருந்து ஊருக்குப் புறப்பட்டனர்.
ஜனாதிபதிக்குரிய பாதுகாப்புத் தொடரணியை அவர் இன்னும் மீளக் கையளிக்காமையால் அந்த வாகனத் தொடரணியிலேயே தற்போது அவர் ஊருக்குப் புறப்பட்டார்.
தம்முடைய தரப்பில் பயன்படுத்தப்படும் மேலதிக வாகனங்களையும் அவர் விரைவில் புதிய அரசிடம் ஒப்படைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மெதமுலனவில் ராஜபக்ஷ தரப்பினரை வரவேற்பதற்கு சிறிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தோல்வியுற்றாலும் தான் தொடர்ந்தும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக பதவியில் இருப்பேன் என்று மகிந்த ராஜபக்ச கூறியிருக்கிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கவிக்கோ அப்துல் ரஹ்மான் பவள விழா (75ஆம் ஆண்டு) தொடக்க உரையின் போது பொழிந்த கவி...
-
தானே,குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, நண்பனின் மனைவியை கற்பழித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மயக்க மருந்து ...
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
-
களிமந்தான் கடற்பகுதியில் விழுந்து நொறுங்கிய ஏர் ஏசியா விமானத்தில் பயணித்த விமான பணிப்பெண் இறுதியா க .............
No comments:
Post a Comment
Leave A Reply