மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டிருந்த பல உயர் அரசாங்க அதிகாரிகள் எதிர்வரும் நாட்களில் பதவி விலகவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்றையதினம் மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் பதவி விலகியுள்ளார்.
தமது பதவி விலகல் கடிதத்தை தாம் சமர்ப்பித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அஜித்நிவாட் கப்ரால், சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுக்கு ஆதரவாக போலியான வர்த்தக அறிக்கைகளை வெளியிட்டு வந்துள்ளார்.
பொருளாதார வளர்ச்சி வேகம், பணவீக்க நிலைமை போன்றவை குறித்து அவர் போலி புள்ளிவிபரங்களை காண்பித்து வந்திருந்தார்.
இந்த போலி அறிக்கைகளின் ஊடாகவே மகிந்தராஜபக்ஷ உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்டவற்றில் இருந்து கடன்களை பெற்றுவந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
Leave A Reply